கண்டாச்சிபுரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை

கண்டாச்சிபுரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை போனது.;

Update:2022-03-29 21:59 IST

திருக்கோவிலூர், 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் ராஜா (வயது 36). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்துடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது,  வீட்டின் பின்பக்க கதவை திறந்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 2500 ரூபாயை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். 

இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்