பக்கத்து வீட்டுக்காரரை சுத்தியலால் தாக்கியவர் கைது

புதுக்கோட்ைட அருகே பக்கத்து வீட்டுக்காரரை சுத்தியலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-03-29 21:59 IST
தூத்துக்குடி:
புதுக்கோட்டை அருகே உள்ள எல்லைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 44). இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுடலைமுத்து மகன் மாயாண்டி (22). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நடந்து செல்லும் பாதையில் நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை சுப்பிரமணியன் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த மாயாண்டி, சுப்பிரமணியனிடம் தகராறு செய்து அவரை சுத்தியலால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்