ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்வு

ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயந்தது.;

Update:2022-03-29 22:50 IST
பொள்ளாச்சி

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். 

ஏலத்திற்கு 135 விவசாயிகள் 776 மூட்டை கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். 9 வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. 

அதன்படி 403 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.88.50 முதல் ரூ.95.55 வரையும், 373 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.78.40 முதல் ரூ.85 வரையும் ஏலம் போனது. 

கடந்த வாரத்தை விட 21 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது. இருந்தபோதிலும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.1.40 விலை அதிகரித்து உள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்