வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காட்டாங்கொளத்தூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-03-30 13:13 IST
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் திருப்பாணாழ்வார் தெருவில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மதுகுடித்து விட்டு வந்ததை அவரது மனைவி மணிகண்டனிடம் தட்டி கேட்டுள்ளார். 

இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்