தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து - 3 பேருக்கு வலைவீச்சு

மறைமலைநகரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update:2022-03-30 13:24 IST
வண்டலூர்,  

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் முருகனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். இதனால் முருகன் கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். 

உடனே 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த முருகன் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்