உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் இறந்து கிடந்த மான் வனத்துறையினர் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் மான் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.;

Update:2022-03-30 21:53 IST

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி அறிந்த திருநாவலூர் போலீசார் விரைந்து சென்று, மான் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே அங்கு வனப்பகுதிகள் ஏதும் இல்லை. இதன் காரணமாக, மான் எவ்வாறு அந்த பகுதிக்கு வந்தது என்பதில் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

யாரேனும் மானை வேட்டையாடி வந்து, போலீசுக்கு பயந்து கிணற்றில் போட்டு சென்றார்களா? அலலது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்