திருவண்ணாமலையில் நகராட்சி கடைகளின் வாடகையை குறைக்க நடவடிக்கை

திருவண்ணாமலையில் நகராட்சி கடைகளின் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-03-30 16:28 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர் வரவேற்றார். 

முதல் கூட்டம் என்பதால் இதில் கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு தங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

கூட்டத்தில் நகராட்சி கடைகளை ஒட்டியுள்ள தனியார் கடைகளின் வாடகை அளவிற்கு நகராட்சி கடைகளின் வாடகையை குறைத்து நிர்ணயம் செய்து நகராட்சியின் வருமானம் உயரவும், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கவும் முறைப்படுத்தி பரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை அனுப்பி வைப்பது. காலியாக உள்ள 95 கடைகள் பொது ஏலம் விடுவது. 

குடிநீர் குழாய்கள், ஆழ்துளை கிணறுகள் சீரமைப்பது, குடிநீர் தொட்டி, கால்வாய், சிறுபாலம் அமைப்பது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்குவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஸ்ரீபிரகாஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்