உபரியாக இருந்தது பற்றாக்குறையானது

உபரியாக இருந்தது பற்றாக்குறையானது;

Update:2022-03-30 22:30 IST
உபரியாக இருந்தது பற்றாக்குறையானது
கோவை 

கோவை மாநகராட்சி 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக கோவையில் 2016-ம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் கடந்த 2017-18, 2018-19, 2019-2020, 2020-21, 2021-22 ஆகிய 5 ஆண்டுகளும் மாநகராட்சி ஆணையாளர்களே தனி அதிகாரியாக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்தனர். 

இதன்படி முந்தைய ஆணையாளர்கள் உபரி பட்ஜெட் தாக்கல் செய்தனர். இந்தநிலையில் நேற்று மேயர் கல்பனா தாக்கல் செய்த பட்ஜெட் ரூ.19 கோடியே 31 லட்சத்துக்கு பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே வருவாய் இனங்களை அதிகரித்து அடுத்த ஆண்டு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்