கோவையில் 150 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில் நடனம், பாட்டுப்பாடி திருநங்கைகள் அசத்தினர்
கோவையில் 150 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில் நடனம், பாட்டுப்பாடி திருநங்கைகள் அசத்தினர்;
கோவை
கோவையில் 150 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில் நடனம், பாட்டுப்பாடி திருநங்கைகள் அசத்தினர்.
திருநங்கைகள் தினம்
திருநங்கைகளின் சமூக பாதுகாப்பு மற்றும் அவர்களின் திறமை களை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக திரு நங்கைகள் தினம் மார்ச் 31-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் கோவை மாவட்ட திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் திருநங்கைகள் நடனம், பாட்டு, கோலம், பேச்சு, ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தினர்.
நலத்திட்ட உதவி
மேலும் பட்டுச் சேலை, நகைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து திருநங்கைகள் ஒய்யாரமாக அணிவகுத்து வந்தது பார்வையாளர்க ளை கவர்ந்தனர்.
இதையடுத்து திருநங்கைகளை வாழவிடு என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
சில திருநங்கைகள் பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 135 திருநங்கை களுக்கு மாநில அடையாள அட்டை, 15 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் 22 பேருக்கு காப்பீடு, 2 பேருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.
இணைந்து வாழ ஆசை
இது குறித்து திருநங்கைகள் கூறுகையில், நாங்கள் பொதுமக்க ளுடன் இணைந்து வாழ ஆசைப்படுகிறோம்.
அதற்கு பல்வேறு சவால்களை நாங்கள் சந்திக்க வேண்டிய உள்ளது.
மேலும் அரசு நல திட்டங்களை பெற எங்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்றனர்.
எனவே திருநங்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.