பணி நீட்டிப்பு செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத் தில் ஒப்பந்த செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

பணி நீட்டிப்பு செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத் தில் ஒப்பந்த செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது;

Update:2022-03-31 18:33 IST

கோவை

பணி நீட்டிப்பு செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத் தில் ஒப்பந்த செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒப்பந்த செவிலியர்கள்

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த தால் கடந்த ஆண்டு கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 98 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்ப டையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. 

அவர்களின் பணி ஒப்பந்த காலம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே பணியில் இருந்து விலகுமாறு ஒப்பந்த செவிலியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

 கொரோனா நேரத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றியதால் பணி நிரந்தரம் அல்லது பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று ஒப்பந்த செவிலியர்கள் எதிர்பார்த் தனர். 

ஆனால் பணியில் இருந்து நிற்க கூறியதால்  அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தர்ணா போராட்டம்

இது குறித்து துறை சம்பந்தமாக பல அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்த செவிலியர்கள் மனு கொடுத்தனர். 

இதையடுத்து ஒப்பந்த செவிலியர்கள் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலத்தில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஒப்பந்த செவிலியர்கள் கூறியதாவது

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் ஒரு வருடமாக நாங்கள் முழு மனதுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணி யாற்றி வந்தோம். 

நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருகிறோம். கொரோனா காலத்தில் கோவிலுக்கு வராதவர்கள் கூட மருத்துவமனைக்கு வந்தார்கள்,

 டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கடவுளுக்கு நிகராக பாராட்டி னார்கள்.

பணி நீட்டிப்பு வேண்டும்

இந்த நிலையில் தமிழக அரசின் பணி விடுவிப்பு ஆணை எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 

அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றியவர்களுக்கு 3 மாத ஊதியம், ஊக்கத்தொகை என்று அறிவிக்கப்பட்ட ரூ.20 ஆயிரமும் இதுவரை எங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. 

மேலும் இதுவரை பணிபுரிந்ததற்கு எந்த பணி அனுபவ சான்றித ழும் வழங்க வில்லை. எனவே நிலுவை ஊதியத்தை வழங்கி, எங்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் சமீரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்