செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேறகப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.;
மணிமேகலை விருது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருதிற்காக தேர்வு செய்யும் செயல்முறைகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையில் வழங்கப்பட்டு உள்ளது.
5-ந்தேதிக்குள்
எனவே விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வரும் 5-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பிட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.