வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி கூறினார்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி கூறினார்;
கோவை
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தினசபாபதி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
சாதிவாரி கணக்கெடுப்பு முறையாக நடத்தப்படாத நிலையில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து சட்டப்போராட்டங்களை நடத்தி வந்தோம்.
ஐகோர்ட்டு இந்த இடஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு கூறியது.
பின்னர் தமிழக அரசு சார்பில் தனித்தனியாக 4 மேல் முறையீடு கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும், அவர்கள் சார்ந்த அமைப்புகள் சார்பிலும் பல மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
எங்களது கூட்டமைப்பு சார்பில் ராஜீவ் தவான், ஜெகதீஷ்குப்தா, முன்னாள் நீதிபதி நாகமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பான முறையில் வாதம் செய்தனர்.
எந்தவித கணக்கெடுப்பும் இன்றி உள்ஒதுக்கீடு வழங்கியது தவறு என்று சுட்டி காட்டினர்.
இதனால் தமிழக அரசின் சட்டம் சுப்ரீம் கோர்ட்டினால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது.
இந்த தீர்ப்பு இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயன் அளிக்கும்.
கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
ஆளும் கட்சியினர் அரசியல் லாபத்துக்காக இதர பிற்படுத் தப்பட்டோரை புறக்கணிப்பதை நிறுத்த வேண்டும்.
இனியாவது உயர் கல்வி, அரசு வேலை வாய்ப்பு புள்ளி விவரங்களுடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இதற்காக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.