வங்கி ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.20 ஆயிரத்தை ஒப்படைத்த பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
வங்கி ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.20 ஆயிரத்தை ஒப்படைத்த பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெகுவாக பாராட்டினார்.;
காஞ்சீபுரம் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் மேட்டுத்தெருவில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கடந்த 28-ந் தேதி இரவு சென்றபோது அங்கு ரூ.20 ஆயிரம் இருப்பதை பார்த்தார். அந்த பணத்தை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகரை சந்தித்து வழங்கி உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
போலீஸ் சூப்பிரண்டு காஞ்சீபுரம் நெல்லுக்கார தெருவில் இயங்கும் தனியார் வங்கி கிளை மேலாளரை நேரில் அழைத்து, அவரிடம் பணத்தை பிரியாவின் மூலம் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்குமாறு கூறினார்.
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் செயல்பட்ட பிரியாவின் செயலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெகுவாக பாராட்டினார்.