ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 7 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2022-03-31 20:26 IST
தமிழகம் முழுவதும் கஞ்சாவை ஒழிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் 2.0 ஒரு மாதம் நடத்தவேண்டும் என தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இது கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை கும்பலுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் சோதனை செய்தனர். போலீஸ் சோதனையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் ஊராட்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பக்தவச்சலம் நகர் அருகே உள்ள ஏரிக்கரை பகுதி போன்ற இடங்களில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கஞ்சா விற்றதாக ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த யஷ்வந்த்(வயது 22), அரிகிருஷ்ணன்(25), யோகேஷ்(28), ஸ்ரீபெரும்புதூரை அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்த கமல்(25), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளி(19), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவிஜெயபால்(22), நாகலாந்தை சேர்ந்த தெகி(31) ஆகியோரை போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்