தமிழ்நாட்டில் உள்ள 200 கோவில்களில் தல புராணங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாட்டில் உள்ள 200 கோவில்களில் தல புராணங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது;

Update:2022-03-31 21:16 IST

துடியலூர்

கோவையை அடுத்த துடியலூர் அருகே வடமதுரை விருந்தீஸ் வரர் கோவில் திருத்துடிசை புராண குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியை தெய்வமணி சண்முகம் வரவேற்றார். இதற்கு கவுமார மடாலயம் குமர குருபர சுவாமிகள் தலைமை தாங்கி பேசினார்.

 திருத்துடிசை புராணம் குறுந்தகடை தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை உயர்மட்ட குழு உறுப்பினர் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வெளியிட்டார்.அவர் பேசும் போது, 

தமிழக அரசின் அறநிலை துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதில் தமிழ்நாட்டில் உள்ள 200 கோவில்களில் தல புராணங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

1500 தல புராணங்களும், 15 தமிழ் இலக்கிய பாடல் களையும், 6 பிள்ளைத்தமிழ் பாடல்களையும் புத்தகமாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

இதில் செயல் அலுவலர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக கல்வெட்டுகளை ஆய்வு செய்து, புராணம் குறித்த குறுந்தகடை தயாரித்த தபால்துறை முன்னாள் அதிகாரி சண்முகம் பேசினார். 

மேலும் செய்திகள்