நாமக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சிறப்பாக செயல்படுத்திய அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

நாமக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சிறப்பாக செயல்படுத்திய அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு;

Update:2022-03-31 21:44 IST
நாமக்கல்:
நாமக்கல்லில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் வளர்ச்சி பணிகளை சிறப்பாக செயல்படுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
ஆய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், நாமக்கல் மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்திய வட்டாரங்களின் செயல்பாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டது.
பாராட்டு சான்றிதழ்
இதன் அடிப்படையில் சிறப்பாக செயல்படுத்திய வட்டாரங்களில் தரவரிசைப்படி பரமத்தி வட்டாரம் முதலிடமும், வெண்ணந்தூர் வட்டாரம் இரண்டாமிடமும், நாமக்கல் வட்டாரம் மூன்றாமிடமும் பெற்றது. இவ்வட்டாரங்களை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்