ராசிபுரத்தில் திடீர் மழை

ராசிபுரத்தில் திடீர் மழை;

Update:2022-03-31 21:44 IST
ராசிபுரம்:
ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாக  வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென மழை பெய்தது. இதனால் ராசிபுரம் நகரில் உள்ள தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம் மட்டுமல்லாமல் ஆண்டகலூர் கேட், கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி, குறுக்கபுரம், போடிநாயக்கன்பட்டி, காக்காவேரி, புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி உள்பட பல கிராமங்களில் மழை பெய்தது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள வயல்கள், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

மேலும் செய்திகள்