அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
தியாகதுருகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பீளமேடு, வடதொரசலூர், தியாகை, சின்னமாம்பட்டு உள்ளிட்ட 8 ஊராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியில் ஊராட்சிகளில் குடிநீர் வசதி, வீட்டு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாபரன், செல்வராஜ், சிவராமன், யோகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.