வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
கள்ளக்குறிச்சி நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏமப்பேர் மற்றும் விளாந்தாங்கல் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதா் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வசதியுடன் சாலை பணிகளை மேற்கொள்ளவும், தரமானதாக அமைக்கவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட விஜயலட்சுமி நகர் மற்றும் டி.எம்.எஸ். நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைக்கிடங்கில் தரம் பிரிக்கப்படுவதை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.