சுல்தான்பேட்டையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
சுல்தான்பேட்டையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.;
சுல்தான்பேட்டை
கோவை வேளாண் பல்கலைக்கழக இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் 11 பேர் அடங்கிய குழு சுல்தான்பேட்டை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கம்மாளப்பட்டி கிராமத்தில் இயற்கை முறையில் ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மாணவிகளால் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மாட்டுச்சாணம் 10 கிலோ, மாட்டு கோமியம் 20 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு வகை மாவு 1 கிலோ, மண் 1 கிலோ எடுத்துக் கொண்டு நன்றாக கலந்து 3 நாட்களுக்கு பிறகு வடிகட்டி சொட்டு நீர் பாசனம் மூலமாக செலுத்தலாம்.
இயற்கை முறையில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தயாரிப்பதால் வெளியில் இருந்து உரம் வாங்க வேண்டிய செலவு குறைகின்றது. இது ஓரு ஊட்டச்சத்து மிகுந்த உரம் ஆகும்.
மேலும் மண்ணின் வளம் அதிகரிக்கின்றது, நோய் தாக்கம் குறைவதால், தென்னை மகசூல் அதிகரிக்கிறது என மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.