முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

சீர்காழி அருகே உள்ள மேல தென்பாதி நங்கநல்லூர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2022-04-01 16:17 GMT
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள மேல தென்பாதி நங்கநல்லூர் தெருவில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 8 மணி அளவில் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகு காவடிகள் எடுத்த பக்தர்கள் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கச்சேரி ரோடு, புதிய பஸ் நிலையம், திட்டை ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத்தொடர்ந்து மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் நகர்மன்ற கவுன்சிலர் ரம்யா தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

மேலும் செய்திகள்