கொரோனாவால் இறந்த 1,422 பேரின் வாரிசுகளுக்கு நிவாரணம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த 1,422 பேரின் வாரிசுகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.

Update: 2022-04-01 16:25 GMT
திண்டுக்கல்:
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் இறந்தனர். இவ்வாறு கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,631 பேர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தனர். இவை அதிகாரிகளை கொண்ட குழு மூலம் விசாரிக்கப்பட்டது.
அதில் 200 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இவர்களில் 1,422 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த 20.3.2022-க்கு முன்பு ஏற்பட்ட கொரோனா இறப்புக்கு நிவாரணம் கேட்டு 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் இறப்புக்கு 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை விசாரித்து 30 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும்.
இந்த காலக்கெடுவுக்குள் நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்க முடியாதவர்கள் மாவட்ட வருவாய் அலுலரிடம் முறையீடு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே கொரோனாவால் இறந்த நபரின் குடும்பத்தினர் உரிய காலத்தில் விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்