பாரதியார் பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்;
வடவள்ளி
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை சார்பில் மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடும் நிகழ்ச்சி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ், பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல், நாட்டுநலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில், காணொலி காட்சி மூலம் பிரமாண்ட திரையில் தோன்றி பிரதமர் மோடி பேசும் போது, மாணவர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற வேண்டும். அவர்கள் கல்வித்தரம் நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வசந்த், பேராசிரியர்கள் மணிவண்ணன், வள்ளி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.