வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி முகாம்கள்

வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி முகாம்கள்;

Update:2022-04-02 22:02 IST
வால்பாறை

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசின் சுகாதாரத்துறையின் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பயணிகள் நிழற்குடை, எஸ்டேட் ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வால்பாறை பகுதியில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டதால் சிறப்பு முகாம்களுக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் மக்கள் தடுப்பூசி போட வந்தனர். 

இதனால் பெரும்பாலான முகாம்கள் வெறிச்சோடி கிடந்தது.  வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் மட்டும் 13 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். வால்பாறை பகுதியில் இதுவரை 65 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். சிறப்பு முகாம்கள் தவிர அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு ஆஸ்பத்திரிகளிலும் தினமும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்