தலைமறைவாக இருந்தவர் 12 ஆண்டுக்கு பின் கைது

12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார்.;

Update:2022-04-03 17:33 IST

கோர்ட்டில் ஆஜராகவில்லை

உத்தர பிரதேச மாநிலம், கண்டோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜேஷ் (வயது 40). இவர் மீது கடந்த 2008-ம் ஆண்டு கொள்ளை, திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக அவர் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரை பிடிக்க 2008-ம் ஆண்டு கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு போடப்பட்டு, கடந்த 12 ஆண்டுகளாக மாமல்லபுரம் போலீசார் அவரை தேடி வந்தனர்.

கைது

ஆனால், போலீசார் பலமுறை அவரை தேடி சென்றபோது, சிக்காமல் அவர் போக்கு காட்டி வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் சுற்றித்திரிவதாக, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறனுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் செங்கல்பட்டு பஸ் நிலையம் சென்று, அங்கு சுற்றி திரிந்த ராஜ்குமாரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்