ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலியானார்.;

Update:2022-04-03 21:55 IST
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 35). டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவர் பாங்கி ஷாப் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி திடீரென இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சலீமை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உமராபாத் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்