குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் நகராட்சி 33-வது வார்டில் உள்ள குமரபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு முறையிட்டனர். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள குமரபுரம் பிரிவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.