ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்;

Update:2022-04-06 21:12 IST
ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
கோவை

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் மேனகா (வயது 26). இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தாவது:- எனக்கும், மதன்குமார் என்பவருக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனிடையே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை மற்றும் தகராறு ஏற்படும்.

இதையடுத்து என் கணவரை விட்டு பிரிந்து வசித்து வருகிறேன். மேலும் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் என் கணவர் மீது புகார் அளித்து இருந்தேன். இந்த நிலையில் கோவில்பாளையம் போலீஸ் நிலைய ஏட்டு ஒருவர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கணவர் விஷம் குடித்து விட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார் என்று கூறினார். பின்னர் அவரை காணவில்லை அதற்கு நான்தான் பொறுப்பு என்று கூறி மன உளைச்சலை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, அவர் எனக்கு மிரட்டல் விடுத்தார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். 

இந்த நிலையில் விசாரணையில் செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியது கோவில்பாளையம் ஏட்டு மூர்த்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஏட்டு மூர்த்தியை ஆயுதபடைக்கு மாற்றி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்