சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த டிரைவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-04-06 21:17 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த டிரைவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கடத்தல்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 29-ந் தேதி திடீரென்று காணாமல் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் மாயம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மகாலிங்கபுரத்தை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் (வயது 24) என்பவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சென்ற போது, அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று சிவக்குமார் திருமணம் செய்தது தெரியவந்தது.

போக்சோவில் டிரைவர் கைது

இந்த நிலையில் வடக்கிபாளையம் பிரிவில் சிறுமியுடன் நின்று கொண்டிருந்த சிவக்குமாரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

 பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்