தார் சாலை அமைக்கும் இடத்தில் அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு

புகழூர் 4 ரோடு பகுதியில் தார் சாலை அமைக்கும் இடத்தில் அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-04-07 00:01 IST
நொய்யல், 
கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை அமைத்ததாக கூறி ரூ.10 கோடி வரை மோசடி நடைபெற்றதாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் சரமாரியாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்திடம் புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில் புகழூர் 4 ரோடு முதல் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 3 கிலோ மீட்டர் வரை நேற்று அவசர அவசரமாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதனை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒப்பந்ததாரர் மீது குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அவசர அவசரமாக சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அப்பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்