மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி அரிசி வியாபாரி உயிரிழந்தார்.;
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த திமிரி மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 62), திமிரி பஜாரில் அரிசி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடந்துள்ளார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பழனி மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.