காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.;

Update:2022-04-07 19:20 IST
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வருகிற 10-ந் தேதி மறைமலைநகரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேச உள்ளார். இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் விசுவநாதன், அன்புசெழியன், கலைவாணி காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் எம்.எல்.ஏ. டி.மூர்த்தி, மறைமலைநகர் நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆராமுதன், ஒன்றிய சேர்மன் உதயா கருணாகரன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் எம்.டி.சண்முகம், ஜெ.வி.எஸ்.ரங்கநாதன், கே.எஸ்.ரவி, டி.குணா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் என்கிற இளங்கோவன், மறைமலைநகர் நகரமன்ற துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி விஜயராஜ், கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்