மகளை பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பெற்ற மகளை பலாத்காரம் செய்த வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு 2-வது விரைவு கோர்ட்டு உத்தரவு.;

Update:2022-04-07 21:11 IST
பெங்களூரு:

பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியில் 40 வயது நிரம்பிய ஒரு வியாபாரி வசித்து வருகிறார். இந்த வியாபாரிக்கு 13 வயதில் மகள் உள்ளாள். இந்த நிலையில் அந்த வியாபாரி தனது மகளை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அந்த வியாபாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோர்ட்டிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் அந்த வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் பெங்களூரு 2-வது விரைவு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்