கோவை அரசு கலைக்கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை அரசு கலைக்கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.;
கோவை
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் மென்திறன் மேம்பாட்டு அலகு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக பெண் சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சானிட்டரி நாப்கின் என்ற தலைப்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை முதல்வர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணியில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை மென்திறன் மேம்பாட்டு அலகு ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான புஷ்பலதா செய்திருந்தார்.