கஞ்சா விற்ற வாலிபர் கைது

கொற்றிகோடு அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார்கைது செய்தனர்.;

Update:2022-04-08 02:51 IST
பத்மநாபபுரம்:
கொற்றிகோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று குமாரபுரம் அருகே அன்னிகுளக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக குமாரபுரம் அருகே படப்பகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சக நண்பர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. 

மேலும் செய்திகள்