இலவச மருத்துவ முகாம்
அருப்புக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா தலைமை தாங்கினார். இம்முகாமில் அருப்புக்கோட்டை கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிமேகலா, அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தலைவர் குருசாமி, செயலாளர் பாலசந்தர், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து ெகாண்டனர். முகாமில் 68 பேருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.