அரசு பள்ளிக்குள் புகுந்து கரடி அட்டகாசம்
அரசு பள்ளிக்குள் புகுந்து கரடி அட்டகாசம்;
ஊட்டி
மஞ்சூர் அருகே கீழ்குந்தா பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை சுற்றி தேயிலை தோட்டம் உள்ளது. அதன் வழியாக பள்ளிக்குள் கரடி நுழைகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் அந்த பள்ளிக்குள் கரடி புகுந்தது. தொடர்ந்து சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை கீழே தள்ளி சேதப்படுத்தியது.
குழந்தைகளுக்கு வழங்க வைக்கப்பட்டு இருந்த முட்டைகளை தின்றும், சமையல் எண்ணெய்யை குடித்தும் சூறையாடியது. இதனால் மறுநாள் பள்ளிக்கு வந்த பணியாளர்கள், ஆசிரியர்கள் சத்துணவு கூடத்தில் கரடி அட்காசம் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குந்தா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.