சாரல் மழை

எஸ்.புதூரில் சாரல் மழை பெய்தது.;

Update:2022-04-08 22:44 IST
எஸ்.புதூர்
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயில் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், நாகமங்கலம், பிரான்பட்டி பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளுமை சூழந்ததால் கோடை வெயிலில் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்