வடமாநில வாலிபர் தற்கொலை

மதுைர டி.ஆர்.ஓ.காலனியில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-04-09 02:35 IST
மதுரை,

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் நூர்முகமது (வயது 28). இவர் மதுரை டி.ஆர்.ஓ. காலனியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நூர்முகமது புதிய கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்