வேலூரில் மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-04-09 17:47 IST
வேலூர்

வேலூர் மத்திய, வடக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்  நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் எம்.ஜி.சத்யநாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரஞ்சித், ஸ்டாலின், திலீப், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், கியாஸ், சொத்துவரி உயர்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், சொத்துவரி உயர்வை ரத்து செய்யும்படியும் கியாஸ் சிலிண்டருடன் கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் வேலூர் மாநகர செயலாளர் சலீம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்