வால்பாறை அருகே தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்த ராஜநாகம்
வால்பாறை அருகே தேயிலை தொழிற்சாலைக்குள் ராஜநாகம் புகுந்தது.;
வால்பாறை
வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரத்தில் ராஜநாகம் ஒன்று பதுங்கியிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இது குறித்து மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனவர்கள், மனித வனவிலங்குகள் மோதல் தடுப்பு குழுவினர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனபாதுகாப்பு அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் குழுவினருடன் சம்பவயிடத்திற்கு சென்றனர். பின்னர் ராஜநாகம் பதுங்கியிருந்த மரக்கிளையை வெட்டி கீழே தள்ளி மரக்கிளையை சுற்றியிருந்த ராஜநாகத்தை பிடித்தனர்.
அப்போது அது 11 அடி ராஜநாகம் ஆகும். இதையடுத்து ராஜநாகத்தை பிடித்து மானாம்பள்ளி வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.