பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன போராட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன போராட்டம் நடைபெறறது.;
புதுக்கோட்டை:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கலந்து கொண்டனர்.