கலவை அருகே நீர்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு அகற்றம்

கலவை அருகே நீர்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.;

Update:2022-04-09 22:24 IST
கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மாம்பாக்கம் அருகே உள்ள வேம்பி கிராமத்தில் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. கலவை தாசில்தார் ஷமீம் தலைமையில், பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்குநோட்டீஸ் வழங்கியும், அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அதிகாரி கீதா, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்