மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2022-04-09 22:46 IST
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள துலாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஏழுமலை(வயது 45). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் செட்டித்தாங்கல் கிராமத்தில் சென்று கொண்டிருந்தார். பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து ஏழுமலை கீழே தவறி விழுந்து உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்