மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
கோவை
சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்பப்பெறக்கோரியும் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அவர்கள் ஒரு ஆட்டோவின் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். தொடர்ந்து கைகளில் தட்டை ஏந்தி பெட்ரோல், டீசல் வாங்க பணமில்லை என்று கூறியவாறு பிச்சை எடுத்து எதிர்பை தெரிவித்தனர். அவர்களுடன் அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.