சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update:2022-04-09 23:41 IST
இளையான்குடி, 
இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் சமரச தீர்வு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், நீதிபதியுமான எம்.சுனில் ராஜா பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் சிவக்குமார், அகமது அலி சமரசர், அண்ணா துரை, குமார், சத்தியேந்திரன், வேல்முருகன், பாலையா, ரவி, மாரிமுத்து, பாண்டியன் ஆகியோருடன் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர். ஏற்பாட்டினை சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கோடிஸ்வரன் மற்றும் இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்