கல் குவாரியில் விழுந்து முதியவர் சாவு

நெல்லை அருகே கல் குவாரியில் விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-04-10 02:21 IST
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தருவை ஆலங்குளத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 65), கூலி தொழிலாளி. இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அந்த பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள கல்குவாரியில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்