வீரஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா

செஞ்சி கோட்டையில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது.;

Update:2022-04-10 22:19 IST
செஞ்சி, 

செஞ்சி கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் ராமநவமி விழா நடைபெற்றது.

மேலும் செய்திகள்