தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்;

Update:2022-04-10 22:26 IST
தர்மபுரி:
தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கணபதி பூஜையுடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு வேள்வி மற்றும் பூர்ணாஹுதி வழிபாடு, மகா தீபாராதனை, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. 
பின்னர் அலங்கார சேவையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்