அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update:2022-04-10 22:39 IST
விழுப்புரம், 

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் மேம்பட்ட பொருட்களின் சிறப்பம்சங்கள் மற்றும் குணாதிசய நுட்பங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் சேட்டு  வரவேற்று பேசினார். இதில் வேலூர் மண்டல இணை இயக்குனர் காவேரி அம்மாள், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் சந்திரசேகரன், பாரதிமோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முனைவர்கள் கனகசபாபதி, மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த இயற்பியல், வேதியியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் முனைவர் பிரதீப் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்